கருணாநிதி நினைவு தினம்:ஈரோட்டில் தி.மு.க.வினர் மவுன ஊர்வலம்அமைச்சர் முத்துசாமி பங்கேற்பு

கருணாநிதி நினைவு தினத்தையொட்டி ஈரோட்டில் தி.மு.க.வினர் மவுன ஊர்வலம் சென்றனா்

Update: 2023-08-07 21:00 GMT

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தி.மு.க. சார்பில் மவுன ஊர்வலம் நடத்தப்படும் என்று தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதன்படி ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மவுன ஊர்வலம் ஈரோட்டில் நேற்று மாலை நடைபெற்றது.

இதையொட்டி ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் திரண்டனர். அங்குள்ள கருணாநிதியின் சிலைக்கு தமிழக வீட்டுவசதித்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சரும், கட்சியின் மாவட்ட செயலாளருமான சு.முத்துசாமி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து மவுன ஊர்வலம் தொடங்கியது. பன்னீர்செல்வம் பூங்காவில் இருந்து தொடங்கிய ஊர்வலம் மணிக்கூண்டு, சத்திரோடு, பஸ் நிலையம், மேட்டூர்ரோடு வழியாக சென்று முனிசிபல் காலனியில் நிறைவடைந்தது. இந்த ஊர்வலத்தில் கருணாநிதியின் சிலை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. இதையடுத்து முனிசிபல் காலனியில் உள்ள கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. கந்தசாமி, மாநகர செயலாளர் சுப்பிரமணியம், மாநகராட்சி மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், கட்சியின் மாவட்ட துணை செயலாளர்கள் செந்தில்குமார், செல்லபொன்னி, சின்னையன், மாவட்ட பொருளாளர் பி.கே.பழனிசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்

Tags:    

மேலும் செய்திகள்