கார்த்திகை சிறப்பு பூஜை

சாணார்பட்டி அருகேயுள்ள திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகையையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.

Update: 2023-10-03 19:45 GMT

சாணார்பட்டி அருகேயுள்ள திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகையையொட்டி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அதில் பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி உள்பட 16 வகை அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் சுப்பிரமணியசுவாமி வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் காமாட்சி மவுனகுருசாமி மடத்திலும் பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடுசெய்தனர். இதைப்போல் நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவில் உள்பிரகாரத்தில் அமைந்துள்ள தண்டபாணி சன்னதியிலும் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்