கனமழை: கன்னியாகுமரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக கன்னியாகுமரியில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.;
கன்னியாகுமரி,
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் ஒருவளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனிடையே, கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ளார்.