உலகத்தையே ஈர்த்துள்ளது தமிழக விளையாட்டுத்துறை; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

விளையாட்டு துறையும் வளர்ந்திருக்கு, துறையின் அமைச்சரும் வளர்ந்திருக்கிறார் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Update: 2024-10-24 14:02 GMT

சென்னை,

சென்னை நேரு விளையாட்டு அரங்க நிகழ்வில் முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்2024   வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

விளையாட்டு வீரர்களை பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தமிழக விளையாட்டு துறையில் பல்வேறு திட்டங்களை அரசு நிறைவேற்றி உள்ளது.

தமிழக விளையாட்டு துறை பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது. தமிழக விளையாட்டு துறை இந்தியாவை மட்டுமில்ல, உலகத்தையே ஈர்த்துள்ளது. விளையாட்டுத்துறையை சிறப்பாக கவனித்து, இந்தியாவே உற்று நோக்கும் துறையாக மாற்றிக் காட்டியிருக்கிறார் தம்பி உதயநிதி. துறையும் வளர்ந்திருக்கு, துறையின் அமைச்சரும் வளர்ந்திருக்கிறார். விளையாட்டுத் துறை அமைச்சர் தம்பி உதயநிதி, துணை முதல்-அமைச்சர் ஆனதில் விளையாட்டு வீரர்களான உங்கள் பங்கும் உண்டு.

எனது ஆட்சியில் விளையாட்டு துறையை பொழுதுபோக்காக பார்ப்பது இல்லை. விளையாட்டு மன வலிமையை, உடல் வலிமையை தரக்கூடியது. பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும். விளையாட்டு வீரர்களின் ஊக்கத்தொகை ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்