கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்; கே.எஸ்.அழகிரி பேட்டி

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம் உள்ளது என்று கே.எஸ்.அழகிரி கூறினார்.

Update: 2023-04-30 19:56 GMT

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று இரவு பெரம்பலூருக்கு வந்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் சிக்கி ஓய்வில் உள்ள கட்சியின் மாநில பொதுச் செயலாளர் தங்க.தமிழ்ச்செல்வனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறுகையில், தமிழக நிதி அமைச்சர் பேசியதாக தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட ஆடியோ தவறானது. அதற்காகவே அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடரலாம். முன்பெல்லாம் பா.ஜ.க.வினர் கொள்கைகளோடு மோதும் நிலை இருந்தது. இப்போது பா.ஜ.க.வினர் பிளாக்மெயில் பண்ண ஆரம்பித்து இருக்கிறார்கள். கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி கண்டிப்பாக தொடரும். தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் எங்களது கூட்டணி பலம் வாய்ந்ததாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்