வரும்முன் காப்போம் மருத்துவ முகாம்

பரமக்குடி அருகே வரும்முன் காப்போம் மருத்துவ முகாமை முருகேசன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

Update: 2023-09-02 18:33 GMT

பரமக்குடி,

பரமக்குடி அருகே உள்ள கலைஞர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன் தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். டாக்டர் சுகந்தி மதிவதனி முன்னிலை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் நதியா மனோகரன் அனைவரையும் வரவேற்றார். முகாமில் டாக்டர்கள் பிரதீபா, பக்கீர் முகமது தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர். அவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. இதில் தி.மு.க. பரமக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், கலையூர் ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம், கிளைச்செயலாளர் சந்திரன் மற்றும் மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்