கன்னியாகுமரி: டீக்கடை விபத்து - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு

கன்னியாகுமரி டீக்கடை தீவிபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணமாக வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Update: 2022-07-17 06:28 GMT

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- ​

கன்னியாகுமரி மாவட்டம் பார்வதிபுரம் மேம்பாலத்தின் கீழ் அமைந்துள்ள ஷபீக் என்பவரின் தேநீர் விடுதியில் இன்று காலை சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீவிபத்தில் தேநீர்விடுதியில் வேலைபார்த்து வந்த மூசா (வயது 48) பிரவின் (வயது 25) சேகர் (வயது 52) மற்றும் அங்கு தேநீர் அருந்த வந்த சுப்பையன் (வயது 66) சுதா (வயது 43) சந்திரன் (வயது 62) சுசீலா (வயது 50) மற்றும் ஒருவர் உட்பட 8 நபர்கள் தீக்காயம் அடைந்துள்ளனர் என்ற செய்தியினை கேட்டு வருத்தமடைந்தேன்.

மேலும், தீக்காயமடைந்தவர்களுக்கு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.​ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூபாய் ஐம்பதாயிரம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்