சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடிய கன்னியாகுமரி கடற்கரை
கன்னியாகுமரி கடற்கரை சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடியது.
கன்னியாகுமரி,
உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு பண்டிகை காலங்களிலும், விடுமுறை நாட்களிலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். குறிப்பாக சனி மற்றும் ஞாயிறு வார விடுமுறைகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்படும்.
இந்தநிலையில் வாரவிடுமுறை மற்றும் கிருஷ்ண ஜெயந்தி உள்ளிட்ட தொடர் விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் கடந்த 3 நாட்கள் அதிமாக காணப்பட்டது. தொடர் விடுமுறை முடிந்த நிலையில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகையும் வெகுவாக குறைந்தது. இதனால் கன்னியாகுமரி கடற்கரை பகுதிகளும், சுற்றுலா தலங்களும் வெறிச்சோடி காணப்பட்டது.
கன்னியாகுமரியில் உள்ள முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரைப்பகுதி, காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், கடற்கரையிலுள்ள பொழுதுபோக்கு பூங்காக்கள், அரசு பழ தோட்டத்திலுள்ள சுற்றுச்சூழல் பூங்கா, அரசு அருங்காட்சியகம் போன்றவை சுற்றுலாப் பயணிகளின் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.