கஞ்சா விற்ற 2 பெண்கள் உள்பட 8 பேர் கைது

கஞ்சா விற்ற 2 பெண்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-12-23 19:17 GMT

மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதியில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மதுரை அவனியாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, வில்லாபுரம் பகுதியில் கஞ்சா விற்ற முகமது உசேன் (வயது 32) என்பவரை கைது செய்தனர். அதேபோல் கரிமேடு பகுதியில் கஞ்சா விற்ற சித்ரா, லதா (46) ஆகியோரையும், தல்லாகுளம் பகுதியில் விக்னேஷ், சதீஷ், மதிச்சியம் பகுதியில் நீதி, முருகன், அஜீத்குமார் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்