கஞ்சா விற்ற 5 பேர் கைது

கஞ்சா விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2022-09-01 22:31 IST

காரைக்குடி,

காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வினோஜி உத்தரவின் பெயரில் கஞ்சா ஒழிப்பு தனிப்படை போலீசார் புதுவயல் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது திண்டுக்கல் பகுதியில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து புதுவயல் பகுதியில் விற்பனை செய்த கும்பலை போலீசார் சுற்றி வளைத்தனர். அதில் அவர்கள் சாக்கோட்டை விமல் (வயது 22), புதுவயல் மூர்த்தி (19), சுந்தரபாண்டியன்(22), புதுக்கோட்டை மாவட்டம் கல்லூர் சிவகாளிதாஸ் (23), திண்டுக்கல் கோபி(29) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், கஞ்சா ஒழிப்பு தனிப்படை போலீசார் கடந்த 1½ மாத்தில் 2 பெண்கள் உள்பட 27 பேரை கைது செய்து, பல லட்ச ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags:    

மேலும் செய்திகள்