கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது
கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்புவனம்,
பூவந்தி போலீஸ் சரகத்தை சேர்ந்தது படமாத்தூர் கிராமம். இப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்பேரில் பூவந்தி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்கண்ணன் மற்றும் போலீசார் அங்கு ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் கோடீஸ்வரன் (வயது 28), ஆரோக்கிய ஆனந்த் (42) என்பதும், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
இது குறித்து பூவந்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணியன் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தார். அவர்களிடம் இருந்து 250 கிராம் கஞ்சா மற்றும் ரூ.9900, மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.