காஞ்சீபுரம் மாவட்டத்தில் சுதந்திர தினவிழா கலெக்டர் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை

காஞ்சீபுரம் மாவட்டத்தில் சுதந்திர தினவிழாவை யொட்டி கலெக்டர் கலைச்செல்வி மோகன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

Update: 2023-08-16 09:44 GMT

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் சுதந்திர தினவிழாவையொட்டி மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தி போலீஸ் துறை மற்றும் ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுகொண்டார். போலீஸ்துறை, வருவாய் துறை, உள்ளாட்சித் துறை மற்றும் மருத்துவத்துறை போன்ற துறைகளில் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கு பாராட்டு நற்சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

மேலும் மொத்தம் 60 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 55 லட்சத்து 40 ஆயிரத்து 706 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் மொழிப்போர் தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காஞ்சீபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜூலியஸ் சீசர், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் விநாயகம், வெற்றிச்செல்வன், பிரபாகரன், பாலமுருகன் மற்றும் அரசு அலுவலர்களுக்கு சான்றிதழ்களையும் மாவட்ட கலெக்டர் வழங்கி கவுரவித்தார்

இந்த நிகழ்ச்சியில் தமிழக செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் மோகன், காஞ்சீபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பொன்னி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ், காஞ்சீபுரம் வருவாய் கோட்ட அதிகாரி ரம்யா, காஞ்சீபுரம் எம்.எல்.ஏ சி.வி.எம்.பி.எழிலரசன், காஞ்சீபுரம் மாவட்ட ஓ.பன்னீர்செல்வம் அணி செயலாளர் முத்தியால்பேட்டை ஆர்.வீ.ரஞ்சித்குமார், அனைத்து துறை அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்