கோவில்பட்டி காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவில்பட்டி காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2022-10-10 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி காமராஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி கமிட்டி உறுப்பினர் சாமிராஜ் முன்னிலையில் நடந்தது. பள்ளி முதல்வர் ஜோதிலட்சுமி வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சியில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மாவதி கலந்து கொண்டு போதைப் பொருட்களால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்தும், மாணவர்கள் படிப்பிலும், விளையாட்டிலும் ஆர்வத்தை காட்டி மேம்பட வேண்டும் என்று பேசினார்.

நிகழ்ச்சியில் மாணவர்கள் போதை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பள்ளியில் கடந்த 9 நாட்களாக நடந்த தடகள மற்றும் ஹாக்கி பயிற்சி முகாமில் கலந்து கொண்ட மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை இன்ஸ்பெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில் பயிற்சியாளர் தனசேகர், உடற்கல்வி ஆசிரியர் பிரகாஷ் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். உடற்கல்வி ஆசிரியர் மரியமைக்கேல் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்