ரேஷன் கடை விற்பனையாளரை ஓராண்டு கண்காணிக்க நீதிபதி உத்தரவு

ரேஷன் கடை விற்பனையாளரை ஓராண்டு கண்காணிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2023-02-02 21:19 GMT

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா மேக்குடி ரேஷன் கடையில் கடந்த 2008-ம் ஆண்டில் ரூ.7,522 முறைகேடு செய்ததாக அந்த கடையின் விற்பனையாளர் ரங்கராஜ் என்பவர் மீது குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத் வழக்குப்பதிவு செய்தார். இந்த வழக்கு திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 6-ல் நடைபெற்று வந்தது.

இந்தநிலையில் இந்த வழக்கில் நேற்று நீதிபதி தீர்ப்பு கூறினார். அந்த தீர்ப்பில், "குற்றம்சாட்டப்பட்ட ரங்கராஜை ஒருவருடம் நன்னடத்தை அலுவலரால் கண்காணிக்க வேண்டும்" என்றும், "கண்காணிப்பு காலத்தில் இதுபோன்ற ஏதேனும் குற்றச்செயலில் மீண்டும் ஈடுபட்டால், அவருக்கு 3 வருடம் சிறை தண்டனை விதிக்கப்படும்" என்றும் கூறப்பட்டு இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்