இலவச பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம்

இலவச பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம்

Update: 2023-04-18 09:45 GMT

திருப்பூர்

மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் சார்பில் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலான தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அசியலமைப்பு சார்ந்த அமைப்புகள், சட்டப்பூர்வ அமைப்புகள், தீர்ப்பாயங்கள் போன்றவற்றில் உள்ள குரூப்-பி, குரூப்-சி நிலையில் 7,500-க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்கள் அறிவித்துள்ளது. இந்த தேர்வுக்கு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்களின் விவரம், வயது வரம்பு, தேவையான கல்வித்தகுதி, செலுத்த வேண்டிய கட்டணம், தேர்வுத்திட்டம், விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் ஆள்சேர்ப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவரங்களுக்கு https://ssc/nic.in/SSCFilesServer/PortelManagement/UploadeFiles/noticeCGLE03042023.pdf என்ற இணையதள முகவரியை தொடர்பு கொள்ளலாம். காலிப்பணியிடங்களுக்கு www.ssc.nic.in என்ற பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். வருகிற மே மாதம் 3-ந் தேதி ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க கடைசிநாளாகும். கணினி அடிப்படையிலான தேர்வு வருகிற ஜூலை மாதம் தமிழகத்தில் 7 மையங்களில் நடக்கிறது.

திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்களில் பணியாளர் தேர்வாணைய போட்டித்தேர்வுக்களுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நேரடியாக நடத்தப்பட உள்ளன. இந்த தேர்வுக்கான பாடத்திட்டங்கள் மற்றும் பாடக்குறிப்புகள் தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மெய்நிகர் கற்றல் இணையதளத்தில் https://tamilnaducareerservices.tn.gov.in/ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பயிற்சி பெற விரும்புபவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

-

Tags:    

மேலும் செய்திகள்