கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதமும் 3-வது வெள்ளிக்கிழமை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த மாதத்திற்கான வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் பாலமுருகன் தலைமை தாங்கினார். இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர்கள் சாய் பிரியா, ரேணுகாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர் சென்னை, புதுச்சேரி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகள், இளைஞர்களிடம் நேர்காணல் நடத்தி தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான நபர்களை தேர்ந்தெடுத்தனர். பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை உடனடியாக வழங்கப்பட்டது. இந்த முகாமில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.