கோவிலுக்கு சென்ற மூதாட்டியிடம் நகை திருட்டு

கோவிலுக்கு சென்ற மூதாட்டியிடம் நகை திருட்டு

Update: 2022-06-21 15:43 GMT

அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி காமாட்சி நகர் பகுதியை சேர்ந்தவர் நல்லையா. இவரது மனைவி மூக்கம்மாள் (வயது 72). இவர் நேற்று முன்தினம் சுந்தரநாச்சியம்மன் கோவிலுக்கு சாமி கும்மிட சென்றுள்ளார். சாமி கும்பிட்டு வெளியே வந்து பார்த்த போது மூக்கம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 3½ பவுன் நகையை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர். இதுகுறித்து மூக்கம்மாள் பந்தல்குடி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்