விக்கிரவாண்டி அருகே வீடு புகுந்து 14½ பவுன் நகைகள் கொள்ளை மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

விக்கிரவாண்டி அருகே வீடு புகுந்து 14½ பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2022-09-22 18:45 GMT

விக்கிரவாண்டி, 

விக்கிரவாண்டி அருகே உள்ள பனையபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சிவப்பிரகாசம் (வயது 64). இவர் நேற்று முன்தினம் இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் வீட்டின் பின்பக்க கதவு உள்பக்க தாழ்பாளை நெம்பி திறந்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், பீரோவில் வைக்கப்பட்டிருந்த 14½ பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். சிவப்பிரகாசம் குடும்பத்தினர் காலையில் எழுந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது. இதனால் பதறிய சிவப்பிரகாசம் இதுபற்றி விக்கிரவாண்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து, நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்