ஜவுளிக்கடை அதிபர் வீட்டில் பூட்டை உடைத்து 15 பவுன் நகை மற்றும் 1 லட்சத்து 50 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.
ஜவுளிக்கடை அதிபர் வீட்டில் பூட்டை உடைத்து 15 பவுன் நகை மற்றும் 1 லட்சத்து 50 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.
வீரபாண்டி
திருப்பூரில் ஜவுளிக்கடை அதிபர் வீட்டில் பூட்டை உடைத்து 15 பவுன் நகை மற்றும் 1 லட்சத்து 50 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
நகை, பணம் திருட்டு
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் பகுதி சேர்ந்தவர் அமர்சிங் (வயது 54). இவர் திருப்பூர்-மங்கலம் சாலை ஏ.பி.டி. சாலையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மேலும் மங்கலம் சாலை தாடிக்கார மூக்கு பகுதியில் ஜவுளி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் அமர்சிங் உறவினர் திருமண நிகழ்ச்சிக்காக வீட்டை பூட்டி விட்டு நேற்று முன்தினம் குடும்பத்துடன் கேரளாவுக்கு சென்றார். பின்பு நேற்று மதியம் வீட்டிற்கு வந்த போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக உள்ளே சென்று பார்த்த போது பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த பொருள்கள் சிதறிக் கிடந்தன.
அதில் வைக்கப்பட்டிருந்த 15 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் திருட்டுப்போயிருந்தது.
போலீசில் புகார்
இது குறித்து திருப்பூர் சென்ட்ரல் போலீசில் அமர்சிங் புகார் செய்தார். உடனே போலீசார் சம்பவம் நடந்த வீட்டிற்கு வந்து விசாரணை செய்தனர். போலீசார் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்க வில்லை. கைரேகை நிபுணர்கள் அங்கு வந்து வீட்டின் கதவு மற்றும் பீரோவில் பதிவாகி இருந்த கைரேகையை சேகரித்தனர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு மேற்கொண்டனர். அமர்சிங் வெளியூர் சென்றதை அறிந்த ஆசாமிகள் அவருடைய வீட்டிற்கு வந்து வீட்டு கதவின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடி சென்று இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
பூட்டிய வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணம் திருட்டு போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
---
1 காலம்
பீரோஉடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை படத்தில் காணலாம்.