தையல் தொழிலாளி வீட்டில் நகை திருட்டு
தையல் தொழிலாளி வீட்டில் நகை திருட்டு போனது.
கொண்டலாம்பட்டி:
கொண்டலாம்பட்டி அருகே உள்ள உத்தமசோழபுரம் ராஜவீதியை சேர்ந்தவர் எஸ்தர் (வயது 40). தையல் தொழிலாளி. இவர் தினமும் வேலைக்கு செல்லும் போது, வீட்டை பூட்டிவிட்டு, சாவியை தனது குடும்பத்தாருக்கு தெரியும்படி ஒரு ரகசிய இடத்தில் வைத்து விட்டு செல்வார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அந்த சாவியை எடுத்து, வீட்டின் கதவை திறந்து பீரோவில் இருந்த 2½ பவுன் நகையை திருடிச்சென்று விட்டனர். இது குறித்து எஸ்தர் கொண்டலாம்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீடு புகுந்து திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.