ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு

ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

Update: 2022-12-05 18:36 GMT

தமிழகம் முழுவதும் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. அந்தவகையில் கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி மாவட்ட அவைத்தலைவர் திருவிகா தலைமையில் கரூர் லைட்ஹவுஸ் கார்னரில் உள்ள ஜெயலலிதாவின் திருஉருவச்சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். இதில் கரூர் சட்டமன்ற தொகுதி பொதுக்குழு உறுப்பினர் சிவசாமி, ஒன்றிய செயலாளர்கள் மார்க்கண்டேயன், கமலக்கண்ணன், பகுதி செயலாளர் வி.சி.கே.ஜெயராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் தானேஷ் என்கிற முத்துக்குமார், கே.சி.எஸ்.விவேகானந்தன் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு ஜெயலலிதாவின் திருஉருவச்சிலைக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும் நகரின் பல்வேறு இடங்களில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதேபோல் தோகைமலை அ.தி.மு.க. மேற்கு ஒன்றியம் சார்பாக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலிலதா நினைவு தினம் அனுசரிப்பு தோகைமலை பஸ் நிலையம் எதிரே நடைபெற்றது. இதற்கு தோகைமலை ஒன்றிய செயலாளர் ரெங்கசாமி, ஒன்றிய சேர்மன் லதா ஆகியோர் தலைமை தாங்கினர். ஒன்றிய துணை செயலாளர் துரைக்கவுண்டர், மாவட்ட கவுன்சிலர் வசந்தா பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதையடுத்து அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதேபோல் தோகைமலை ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் ஜெயலலிதா நினைவு தினமும் அனுசரிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்