சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை
மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் 6-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
சென்னை,
மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் 6-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. நினைவு தினத்தை ஒட்டி சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அவருடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார் , கேபி முனுசாமி உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். நினைவு தினத்தை அனுசரிக்கும் வகையில் அதிமுக தலைவர்கள் கருப்பு சட்டை அணிந்து இருந்தனர். கட்சியினர் மட்டும் இன்றி பொதுமக்கள் பலரும் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.