மஞ்சள் காமாலை வைரஸ் இல்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும்

உலக கல்லீரல் அலர்ஜி தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மஞ்சள் காமாலை வைரஸ் இல்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும் திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி முதல்வர் ஜோசப்ராஜ் தொிவித்தார்.

Update: 2023-07-27 18:45 GMT


உலக கல்லீரல் அலர்ஜி தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மஞ்சள் காமாலை வைரஸ் இல்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும் திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி முதல்வர் ஜோசப்ராஜ் தொிவித்தார்.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக கல்லீரல் அலர்ஜி தினத்தையொட்டி திருவாரூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மருத்துவக்கல்லூரி முதல்வர் ஜோசப்ராஜ் தலைமை தாங்கினார். டாக்டர் சுகுமார் வரவேற்றார். மருத்துவக்கல்லூரி துணை முதல்வர் உமா முன்னிலை வகித்தார்.

இந்த நிகழ்ச்சியில் கல்லீரல் அலர்ஜி பாதிப்பு குறித்தும், பரவுவது குறித்தும், அதில் இருந்து பாதுகாப்பது குறித்தும் டாக்டர்கள் விரிவாக விளக்கம் அளித்தனர்.

'ஹெபடைடிஸ் வைரஸ்'

தொடர்ந்து மருத்துவக்கல்லூரி முதல்வர் ஜோசப்ராஜ் கூறியதாவது:- உலக அலர்ஜி தினத்தையொட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. திருநங்கைகள், பால்வினை தொழிலாளர்கள், மருத்துவத்துறையில் பணியாற்றுபவர்களுக்கு 'ஹெபடைடிஸ் வைரஸ்' (மஞ்சள் காமாலை வைரஸ்) பாதிப்பு அதிகம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.குறிப்பாக கருவுற்ற தாய்மார்கள் இந்த வைரசால் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கருவுற்ற பெண்களுக்கு ஹெபடைடிஸ் வைரஸ் பாதிப்பு உள்ளதா? என்று பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

உறுதி ஏற்க வேண்டும்

வருங்காலத்தில் ஹெபடைடிஸ் வைரஸ் இல்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று அனைவரும் உறுதி எடுத்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களின் ரத்த மாதிரிகளை பெறப்பட்டு ஹெபடைடிஸ் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

இதில் நிலைய அலுவலர் ராமசந்திரன், மருத்துவ கண்காணிப்பாளர் அன்சாரி, டாக்டர்கள் நடராஜ், வினோத் கண்ணா, கார்த்திகேயன், கிரிஜா, பிரபா, கோமதி, அண்ணாமலை வடிவு மற்றும் செவிலியர்கள், பயிற்சி செவிலியர்கள், மாணவர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் லெனின் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்