திருந்தி வாழப்போகிறோம் என்று உறுதி அளித்துவிட்டு குற்றச்செயலில் ஈடுபட்ட 3 பேருக்கு சிறை

திருந்தி வாழப்போகிறோம் என்று உறுதி அளித்துவிட்டு குற்றச்செயலில் ஈடுபட்ட 3 பேருக்கு ஜாமீனில் வெளியே வர முடியாத வகையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Update: 2022-06-19 04:02 GMT

சென்னை பிராட்வே பி.ஆர்.என்.கார்டன் பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வயது 26), அமைந்தகரை பி.பி.கார்டன் 5-வது தெருவை சேர்ந்தவர் ஆழாக்கு என்கிற விக்னேஷ் (28), பெரும்பாக்கம் எழில்நகரை சேர்ந்த விக்னேஷ் (28). இவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் தமிழ்செல்வன், பூக்கடை துணை கமிஷனர் முன்னிலையில் ஆஜராகி இனி குற்றச்சம்பவங்களில் ஈடுபட மாட்டேன். திருந்தி வாழப் போகிறேன் என்று உறுதிமொழி பத்திரம் அளித்தார். இதே போன்று ஆழாக்கு, விக்னேஷ் ஆகியோரும் தங்கள் பகுதி போலீஸ் எல்லைக்குட்பட்ட துணை கமிஷனர்கள் முன்பு ஆஜராகி உறுதிமொழி பத்திரம் அளித்திருந்தனர். ஆனால் ஒரே வாரத்தில் அவர்கள் 3 பேரும் மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்டு போலீசாரிடம் சிக்கி உள்ளனர். இதையடுத்து அந்த 3 பேருக்கும் ஜாமீனில் வெளியே வர முடியாத வகையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் தொடர் குற்றசெயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் கடந்த ஒரு வாரத்தில் 11 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்