ஜெகநாதப்பெருமாள் கோவில் குடமுழுக்கு பணிகள்

ஜெகநாதப்பெருமாள் கோவில் குடமுழுக்கு பணிகள்

Update: 2023-05-22 19:09 GMT

கும்பகோணம் அருகே நாதன்கோவில் பகுதியில் ஜெகநாதப்பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ரூ.1 கோடியில் திருப்பணிகள் நடந்து முடிந்தது. நாளை(புதன்கிழமை) கோவில் குடமுழுக்கு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு வானமாமலை ராமானுஜ ஜீயர் சுவாமிகள் நேற்று பெருமாள், தாயார், கருடவாழ்வார், ஆஞ்சநேயர், ஆழ்வார்கள் சன்னதிகள் மற்றும் ராஜகோபுரம், விமானங்கள், மடப்பள்ளி, யாகசாலை கட்டிட பணிகளை நேரில் பார்வையிட்டார். பின்னர் கோவில் நிர்வாகம் சார்பில் ஜெகநாதப்பெருமாள் உற்சவருக்கு ரூ.3 லட்சம் மதிப்பில் வடிவமைக்கப்பட்டுள்ள நவீன கற்கள் பதிக்கப்பட்ட வைரமுடி கிரீடத்தையும் பார்வையிட்டார். அப்போது ஜெகநாதப்பெருமாள் கோவில் குடமுழுக்கு கமிட்டியினர் மற்றும் கோவில் மேலாளர் மகாலிங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்