ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அன்பழகன், சரவணன், ரவி ஆகியோர் தலைமை தாங்கினர். பழைய ஓய்வூதிய திட்டத்தினை உடனடியாக அமல்படுத்த வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை முறைப்படுத்த வேண்டும். 21 மாத ஊதிய மாற்று நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதில் ஆசிரியர்- அரசு ஊழியர், பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் கலைவாணன் தலைமை தாங்கினார். இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் இளவரசன், பட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணைத்தலைவர் அசோக்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.