தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஓட்டுனர் உரிமம் வழங்க வேண்டும்: போக்குவரத்து ஆணையர் பேட்டி

தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஓட்டுனர் உரிமம் வழங்க வேண்டும் என போக்குவரத்து ஆணையர் நிர்மல் குமார் கூறினார்.

Update: 2023-05-12 18:46 GMT

ஆய்வு

கரூர் தாந்தோணிமலையில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தை நேற்று போக்குவரத்து ஆணையர் நிர்மல்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு செயல்பட்டு வரும் தானியங்கி கணினி ஓட்டுனர் தேர்வு தளத்தையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் போக்குவரத்து ஆணையர் நிர்மல்குமார் நிருபர்களிடம் பேட்டிளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஓட்டுனர் உரிமம் (லைசன்ஸ்) வழங்கும்போது விருப்புவெறுப்பின்றி, ஓட்டுனர் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஓட்டுனர் உரிமம் வழங்க வேண்டும். இந்த தானியங்கி கணினி ஓட்டுனர் தேர்வு தளம் போன்று தமிழகத்தில் 20 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.

ஆன்லைன் மூலம்..

இதேபோன்று செயல்படுத்துவதா அல்லது இதனை மேம்படுத்தி செயல்படுத்துவதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஓட்டுனர் உரிமம் புதுப்பிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் தற்போது ஆன்லைன் மூலமாக நடைபெற்று வருகிறது.

படிப்படியாக ஆன்லைன் சர்வீஸ்கள் தற்போது கொண்டு வரப்பட்டு வருகிறது. வருங்காலத்தில் ஆன்லைன் மூலம் 54 சர்வீஸ்கள் கொண்டு வரப்பட உள்ளது.

37 சோதனைகள்

அப்போது பொதுமக்கள் வீட்டில் இருந்துகொண்டே பல சர்வீஸ்களை பெற்றுக்கொள்ளலாம். ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு வர வேண்டிய அவசியம் இல்லை. இதேபோல் வாகனங்கள் எப்.சி. கொடுப்பதும் ஆட்டோமேடிக் டெஸ்டிங் சென்டருக்கு சென்றுதான் எடுக்க வேண்டும் என மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. இதில் 37 சோதனைகள் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது போக்குவரத்து அலுவலர்கள் உடனிருந்த

Tags:    

மேலும் செய்திகள்