சொரிமுத்து அய்யனார் கோவிலில் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. சாமி தரிசனம்
காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. சாமி தரிசனம் செய்தார்.
விக்கிரமசிங்கபுரம்:
காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து பட்டவராயன் சன்னதி, சங்கிலி பூதத்தார் சன்னதி உள்ளிட்ட சன்னதிகளிலும் வழிபட்டார். தொடர்ந்து அவர் கூறுகையில், பக்தர்கள் கோவிலில் 10 நாட்கள் தங்க அனுமதிக்க கோரி நீதிமன்றத்தை நாட இருக்கிறேன். வனத்துறையினர்-வருவாய் துறையினர் மோதலை சுமூகமாக தீர்வு காண வேண்டும் என்றார்.
மணிமுத்தாறு பேரூராட்சி முன்னாள் தலைவர் சிவன்பாபு, சேரன்மாதேவி ஒன்றிய செயலாளர் மாரிச்செல்வம், பேச்சாளர் மின்னல் மீனாட்சி ஆகியோர் உடன் இருந்தனர்.