இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. ஆய்வு

விக்கிரமசிங்கபுரத்தில் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

Update: 2022-12-04 18:52 GMT

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் சாலையில் மரம் விழுந்ததில், இந்து முன்னணி பிரமுகர் ஒருவர் காயம் அடைந்தார். இந்தநிலையில் அம்பை சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா, சம்பவம் நடந்த இடத்துக்கு சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அப்போது அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் கூறுகையில், வாறுகால் அமைக்கும் பணிகள் நடப்பதால் சாலையின் இருபுறமும் பொக்லைன் எந்திரத்தை கொண்டு பள்ளம் தோண்டினர். இதனால் மரங்கள் வலுவிழந்து மழையில் சாய்ந்தது. இதேபோன்று பல மரங்கள் சாலையோரம் ஆபத்தான நிலையில் விழும் நிலையில் இருப்பதாக தெரிவித்தனர்.

அவர்களிடம் இசக்கி சுப்பையா, இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பேசி உடனடியாக ஆபத்தான மரங்களை அகற்ற ஏற்பாடு செய்வதாக கூறினார். மேலும் சாலை விரிவாக்க பணி மற்றும் வாறுகால் அமைக்கும் பணியை விரைந்து முடித்திட ஆவன செய்வதாக கூறினார். ஆய்வின் போது, கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்