எண்ணும் எழுத்தும் திட்டம் இலக்கை நோக்கிச் செல்கிறதா?

எண்ணும் எழுத்தும் திட்டம் இலக்கை நோக்கிச் செல்கிறதா? என்று மக்கள் கருத்துக்கள் தெரிவித்துள்ளனர்

Update: 2022-12-12 18:45 GMT

 1, 2, 3-ம் வகுப்புகளில் அடிப்படையாகக் பாடம் கற்றுத் தரப்படும் எண்ணறிவையும், எழுத்தறிவையும் பெறாமல் விடுபட்ட குழந்தைகளுக்கு, அதைப் பெறுவதற்கான வாய்ப்பை உறுதி செய்வதற்காகத்தான் எண்ணும் எழுத்தும் திட்டம் அரசால் தொடங்கப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க திட்டமாகும். மாணவர்களின் பங்கேற்பை அதிகப்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தயக்கம் இன்றி மேடை பயமின்றி பேசுவதற்கு வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அத்துடன் கொரோனா காலத்தில் டி.வி. பார்ப்பது, செல்போனில் விளையாடுவது போன்ற செயல்பாடுகளால் மாணவர்களுக்குக் கவனச் சிதறல் ஏற்பட்டுள்ளது என்றும், இதனால் மாணவர்களை வகுப்பறையில் அமரவைத்து கற்றலில் ஈடுபடுத்துவது மிகக் கடினமாக இருப்பதாகவும் ஆசிரியர்களிடமிருந்து கருத்துகள் பெறப்பட்டதால் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டதாக தெரிகிறது. இந்த திட்டத்தின் மூலம் கற்றலில் உடல் இயக்கச் செயல்பாடுகளை அதிகரித்து கவனகுவிப்புச் செயல்பாடுகளுக்கும் அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. அடிப்படை எண்ணறிவு எழுத்தறிவோடு பல நுண் திறன்களை பெறும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பது சிறப்பான ஒன்றாகும். அதேசமயம் திறன் பெற்ற ஆசிரியர்களை கொண்டு அனைத்து அரசு பள்ளிகளில் முழுமையாக எண்ணும் எழுத்தும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்