கருவில் இருப்பது ஆணா? பெண்ணா என பரிசோதனை செய்தால் நடவடிக்கை

கருவில் இருப்பது ஆணா? பெண்ணா என பரிசோதனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.

Update: 2023-10-06 18:28 GMT

ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பகுதியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் சார்பில் ஜோலார்பேட்டை வட்டாரத்தை சேர்ந்த 25 புதுமண தம்பதியினருக்கான பயிலரங்கம் நடைபெற்றது. கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

கருவுற்ற காலகட்டத்தில் இரண்டு நபர்களாக இருக்கின்ற பொழுது சரியான அளவு கீரை, காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கர்ப்ப கால கட்டங்களில் நான்கு முறை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். நமது மாவட்டத்தை பொறுத்தவரையில் பாலின வித்தியாசம் அதிகமான அளவில் இருக்கிறது. இந்த வித்தியாசம் இருப்பதற்கு காரணம் சிலர் பெண் குழந்தை வேண்டாம் என்று நினைக்கிறார்கள். கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்று பரிசோதனை செய்வது தெரிய வந்தால் அவர்கள் மீது முதல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர்கள் உள்பட சம்பந்தப்பட்ட துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்