தேவகோட்டையில் வேளாண்மை கூடுதல் இயக்குனர் ஆய்வு

தேவகோட்டையில் வேளாண்மை கூடுதல் இயக்குனர் ஆய்வு செய்தார்.

Update: 2023-09-15 18:45 GMT

தேவகோட்டை,

தேவகோட்டை வட்டார வேளாண்மைத்துறையின் கீழ் செயல்படும் திட்டங்களை வேளாண்மை கூடுதல் இயக்குனர் ஸ்டாமின் சங்கரலிங்கம் ஆய்வு செய்தார். கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சிகளில் 10 ஏக்கருக்கு மேலுள்ள தரிசு நில தொகுப்பை தேர்வு செய்து அரசு நிதியில் கருவேல மரங்களை அகற்றி, மும்முனை மின்சாரத்துடன் கூடிய போர்வெல் அமைத்து சொட்டு நீர் பாசனம் மூலம் தரிசு நில தொகுப்பு முழுவதும் பழமரக்கன்றுகள் நடவு செய்து தரப்படுகிறது. வேளாண்மை கூடுதல் இயக்குனர் கீழஉச்சாணி ஊராட்சியில் கட்டனூர் தொகுப்பு திருமணவயல் ஊராட்சியில் மானம்புவயல் தொகுப்பினை ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு நடவு செய்யப்பட்ட பழமரக்கன்றுகளை பராமரிப்பது குறித்தும் ஆலோசனை வழங்கினார். ஆய்வின்போது வேளாண்மை இணை இயக்குனர் தனபாலன், வேளாண்மை உதவி இயக்குனர் காளிமுத்து, வேளாண்மை அலுவலர் கமலாதேவி, வேளாண்மை உதவி அலுவலர் தியாகராஜன், விஜய், சர்பின்சா, அபிராமி ஆகியோர் உடனிருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்