சூளகிரி:
சூளகிரி அருகே உள்ள பொன்னல்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் படேஸ்வரப்பா. இவருடைய மனைவி லட்சுமி தேவி (வயது 21). இவர்கள் 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக லட்சுமி தேவி நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான 2 ஆண்டுகளில் இளம்பெண் இறந்துள்ளதால் இதுகுறித்து ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த் விசாரணை நடத்தி வருகிறார்.