மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரிடம் போலீசார் விசாரணை

காரிமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-08-21 17:06 GMT

காரிமங்கலம்:

காரிமங்கலம் அருகே உள்ள முக்குளம் அய்யர் கொட்டாயை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது27). டிவி மெக்கானிக். நேற்று மதியம் மொரப்பூர் ரோட்டில் உள்ள துணிக்கடை முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். பின்னர் திரும்பி வந்தபோது மோட்டார் சைக்கிள் திருட்டு போனது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிளை தேடினார். அப்போது அவர் பாலக்கோடு அடுத்த பனந்தோப்பை சேர்ந்த சத்தியமூர்த்தி (25) என்பவர் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை கோவிந்தராஜ் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பிடித்து காரிமங்கலம் போலீசில் ஒப்படைத்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்