மயிலம் அருகேகோவில் திருவிழாவில் பட்டா கத்தியை காட்டி மிரட்டல்4 பேர் கைது

மயிலம் அருகே கோவில் திருவிழாவில் பட்டா கத்தியை காட்டி மிரட்டல் விடுத்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-03-27 18:45 GMT

மயிலம், 

விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் உள்ள மயிலியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது. அப்போது 7 பேர் கொண்ட கும்பல் கூச்சலிட்டபடி வந்தனர். இதைபார்த்த அந்த பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர், அந்த கும்பலிடம் ஏன் சத்தம் போடுகிறீர்கள்? என கேட்டார். இதனால் சரவணனுக்கும், அந்த கும்பலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. சரவணன் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் ஒன்று சேர்ந்து அந்த கும்பலை விரட்ட முயன்றனர். இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல் பட்டா கத்தியை காண்பித்து மிரட்டல் விடுத்தது.

இதுகுறித்து சரவணன் மயிலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த கும்பல் புதுச்சேரி பிள்ளையார் குப்பம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் அருண் (வயது 28), அரியாங்குப்பத்தை சேர்ந்த உத்தமபுத்திரன் மகன் உதயா என்கிற எலி உதயா (39), புதுச்சேரி ஏரிக்கரை பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் அன்பரசன் (30), புதுச்சேரி ஓடைவேளி அரியாங்குப்பதை சேர்ந்த இளங்கோவன் மகன் அஸ்வின் (35) உள்பட 7 பேர் கொண்ட கும்பல் என்பது தெரியவந்தது. இதையடுத்து அருண் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகிறார்கள். கைதான நபர்களிடம் இருந்து ஒரு கார், 3 மோட்டார் சைக்கிள் மற்றும் 8 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்