வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் அபாயகரமான மலைவழிச்சாலை

வால்பாறையில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் உள்ள அபா யகரமான மலைவழிச் சாலையை சீரமைக்க உடனடியாக நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2023-10-11 18:45 GMT

வால்பாறை அருகே கருமலை எஸ்டேட் பகுதியிலிருந்து அக்காமலை எஸ்டேட் வரை உள்ள சாலை நகராட்சி நிர்வாகம் மூலம் போடப்பட்டு பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கருமலை தலைமை ஆஸ்பத்திரியிலிருந்து அக்காமலை எஸ்டேட் வரை செல்லக்கூடிய சாலை பல இடங்களில் சேதமடைந்து குண்டும்,குழியுமாக காணப் படு கிறது. இந்த சாலையில் ஊசிமலை எஸ்டேட் பிரிவு பகுதியில் சாலை மிகவும் பழுதடைந்து பக்கவாட்டில் பாதுகாப்பு தடுப்பு சுவர்கள் ஏதும் இல்லாமல் விபத்து ஏற்படுத்தும் வகையில் ஆபத்தான நிலையில் உள்ளது.

அக்காமலை எஸ்டேட் பகுதிக்கு செல்லும் பஸ்கள் மட்டுமல்லாமல் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும் பாலாஜி கோவிலுக்கும் இந்த சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும். இதனால் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். விபத்து ஏற்படும் வகையில் ஆபத்தான நிலையில் இருக்கும் அக்காமலை எஸ்டேட் வரை செல்லும் சாலையை போர்க்கால அடிப்படையில் நகராட்சி நிர்வாகம் சீரமைப்பு செய்து தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அக்காமலை, ஊசி மலை எஸ்டேட் பகுதி தேயிலை தோட்ட தொழிலாளர்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து உளளார்கள்.

அதனால் நகராட்சி நிர்வாகம் அக்காமலை எஸ்டேட் சாலையை ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட இடத்தில் விபத்து ஏற்படுவதற்கு முன் சாலையை சீரமைப்பு செய்து தடுப்பு சுவர்கள் அமைக்க வேண்டும். மேலும் தேவைப்படும் இடங்களில் சாலையை அகலப்படுத்தி வாகனங்கள் எளிதாக சென்று வருவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளார்கள்.


Tags:    

மேலும் செய்திகள்