சசிகலாவின் வக்கீலிடம் விசாரணை
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சசிகலாவின் வக்கீலிடம் போலீசார் விசாரணை நடத்தினர்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இதுதொடர்பாக 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்தநிலையில் இந்த சம்பவம் குறித்து தற்போது மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையில் கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி மேற்பார்வையில் மறு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இதுவரை சசிகலா, முன்னாள் எம்.எல்.ஏ. வி.சி.ஆறுக்குட்டி, அவருடைய மகன் உள்பட 200-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. இந்தநிலையில் சசிகலாவின் வக்கீலான நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த செந்தில் என்பவரிடம் விசாரணை நடத்துவதற்காக கோவை பி.ஆர்.எஸ். மைதானத்துக்கு வருமாறு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. அ
தன்படி அவர் நேற்று மதியம் பி.ஆர்.எஸ். மைதானத்துக்கு வந்து ஆஜரானார். அவரிடம் ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.