செந்தில் பாலாஜியிடம் விசாரணையை தொடங்கிய அதிகாரிகள் - இரவு நேர விசாரணை நடைபெறாது என தகவல்

அமலாக்கத்துறையினரின் இன்றைய விசாரணையை இரவு 9 மணிக்கு முடிவடையும் என தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2023-08-08 14:18 GMT

சென்னை,

சட்டவிரோத பண பறிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியது. இதன்படி அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் இன்று காலை 9 முதல் 12 மணி வரையும், பிற்பகல் 3 முதல் 4 மணி வரையும் விசாரணை நடத்தப்பட்டது. அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு நேரத் திட்டம் வகுத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 2 மணி நேரத்திற்கு ஒருமுறை ரத்த அழுத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. தேவைப்பட்டால் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிப்பதற்காக 2 இ.எஸ்.ஐ. மருத்துவர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து இன்று இரவு 7 மணிக்கு மீண்டும் விசாரணை நடத்தப்படும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில், தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜி மாத்திரை எடுத்துக் கொள்வதால் இரவு விசாரணை நடத்த வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக இன்றைய விசாரணையை இரவு 9 மணிக்கு முடிவடையும் என தகவல் வெளியாகியுள்ளது. 


Full View


Tags:    

மேலும் செய்திகள்