திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா
திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரியில் மாணவ செவிலியர் சங்கம் சார்பில் கல்லூரி கலை அரங்கத்தில் சர்வதேச மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு, கல்லூரி முதல்வர் கலைக்குருசெல்வி தலைமை தாங்கினார். இணை பேராசிரியை சுமதி வரவேற்று பேசினார். கல்லூரி துணை முதல்வர் பெண்ணரசி அறிமுக உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக திருச்செந்தூர் வக்கீல் சீதாலெட்சுமி கலந்து கொண்டு, பெண்களுக்கு ஏற்படக்கூடிய அநீதியான செயல்களை தடுப்பதற்கு இருக்க கூடிய சட்டங்கள் குறித்து விளக்கி பேசினார். நிகழ்ச்சிகளை 4-ம் ஆண்டு மாணவிகள் சந்தியா, கவுசல்யா ஆகியோர் தொகுத்து வழங்கினர். விழாவில், பேராசிரியைகள், அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர். 4-ம் ஆண்டு மாணவி ஜெர்லின் நன்றி கூறினார்.