கைதிகளிடம், உறவினர்கள் பேச இன்டர்காம் வசதி
வேலூர் பெண்கள் ஜெயிலில் கைதிகளிடம், உறவினர்கள் பேச இன்டர்காம் வசதி செய்யப்பட்டுள்ளது.
வேலூர் தொரப்பாடியில் மத்திய ஆண்கள் ஜெயில் மற்றும் பெண்கள் ஜெயில் அமைந்துள்ளது. ஜெயில் வளாகத்தில் கம்பிகளுக்கு இடையில் சுமார் 2 மீட்டர் தூரத்தில் நின்று கைதிகளும், அவர்களது உறவினர்களும் பேசுவார்கள். இதனால் அவர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்தனர். இதையடுத்து ஆண்கள் ஜெயிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இன்டர்காம் வசதி ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் நேற்று பெண்கள் ஜெயிலில் இன்டர்காம் வசதி ஏற்படுத்தப்பட்டது. இதனை ஜெயில் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
அவற்றின் மூலம் கைதிகள் தங்கள் குடும்பத்தினர், உறவினர்களிடம் சிரமமின்றி பேசினர்.