பள்ளிகளுக்கு இடையேயான தடகள போட்டிகள்
காவேரிப்பாக்கம் வட்டார அளவில் பள்ளிகளுக்கு இடையேயான தடகள போட்டிகள் நடைபெற்றன.
நெமிலி
காவேரிப்பாக்கம் வட்டார அளவில் பள்ளிகளுக்கு இடையேயான தடகள போட்டிகள் நடைபெற்றன.
தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் காவேரிப்பாக்கம் வட்டார பள்ளிகளுக்கிடையேயான தடகள போட்டிகள் நெமிலியில் உள்ள விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்தது.
போட்டியினை ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா தொடங்கி வைத்தார். செந்தில்குமார், வேதையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். குமணன் வரவேற்றார்.
இதில் காவேரிப்பாக்கம் வட்டாரத்திற்கு உட்பட்ட சயனபுரம், அன்வர்த்திகான்பேட்டை, அசநெல்லிகுப்பம், காவேரிப்பாக்கம், பனப்பாக்கம் உள்ளிட்ட 54 பள்ளிகளை சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், தொடர் ஓட்டம் உள்ளிட்ட தடகள விளையாட்டுகள் நடைபெற்றன.
பின்பு முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா வழங்கினார்.
இதில் விஜயா வேதையா, பி.டி.மணி மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.