ரூ.124 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்க பணி தீவிரம் - நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு

ரூ.124 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று கொண்டு இருக்கும் சாலை விரிவாக்க பணிகளை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Update: 2022-07-04 04:45 GMT

திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழக முதல்-அமைச்சரின் சாலை விரிவாக்க திட்டத்தின் கீழ் ரூ.124 கோடி மதிப்பீட்டில் இரு வழிச்சாலைகள் நான்கு வழிச்சாலைகளாக மாற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

அதன்படி திருவள்ளூர் கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வாலாஜாபாத், சுங்குவார்சத்திரம் மாநில நெடுஞ்சாலை மற்றும் மணவாளநகர், மேல்நல்லாத்துார் மாநில நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. திருவள்ளூர் அடுத்த கீழ்நல்லாத்தூர் பகுதியில் நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணிகளை மேற்கொண்டனர்.

இந்த பணியினை நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தலைமை என்ஜினீயர் சந்திரசேகர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது திருவள்ளூர் கோட்ட என்ஜினீயர் ஞானவேலு, உதவி கோட்ட என்ஜினீயர் தஸ்நேவிஸ் பர்ணாண்டோ உதவி என்ஜினீயர் ஜெயமூர்த்தி, ராஜ்கமல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர். இந்த பணியில் 12 சிறுபாலங்கள் விரிவுபடுத்தவும், இரு வழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

இந்த நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளை அடுத்த ஆண்டிற்குள் முடிக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்