வெம்பக்கோட்டையில் பட்டாசு உற்பத்தி தீவிரம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெம்பக்கோட்டையில் பட்டாசு உற்பத்தி தீவிரமாக நடந்து வருகிறது.;

Update:2023-10-12 02:34 IST

வெம்பக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி வெளி மாநிலங்களில் இருந்து ஆர்டர்கள் கிடைத்துள்ளதால் கடைசி கட்ட பட்டாசு உற்பத்தி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.பெண்கள், சிறுவர், சிறுமிகள், இளைஞர்களை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு வண்ணத்தில், பல்வேறு ரகங்களில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. நாக்பூர் பட்டாசு உரிமம் பெற்ற ஆலைகள், டி.ஆர்.ஓ. உரிமம் பெற்ற பட்டாசு ஆலைகள் உற்பத்தியை தீவிரப்படுத்தியுள்ளன. இதனால் பட்டாசு ஆலைகளில் தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.


இதனால் கடந்த சில வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை கூட விடுமுறை விடாமல் பட்டாசு உற்பத்தியை தொடர்ந்து செய்து வருகின்றனர்.மழைக்காலம் தொடங்கி விட்டால் பட்டாசு உற்பத்தி முழுமை பெறுவது சிரமம் என்பதால் பட்டாசு உற்பத்தி தடையில்லாமல் நடைபெற்று வருகிறது. அதேபோல பட்டாசு கடைகளிலும் விற்பனையும் விறு விறுப்பாக நடைபெற்று வருவதால் உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகள் உடனுக்குடன் பட்டாசு ஆலையில் இருந்து பேக்கிங் செய்யப்பட்டு அனுப்பி வைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

வெடி உப்பு, சல்பர், அலுமினிய பவுடர், அட்டை பெட்டிகளின் விலை கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு கடுமையான உயர்ந்துள்ளது. இருப்பினும் பட்டாசுகளின் விலையை உயர்த்த முடியாமல் பட்டாசு உரிமையாளர்கள் சிரமப்படுகின்றனர்.ஆண்டு முழுவதும் பட்டாசுகளை உற்பத்தி செய்தாலும் தீபாவளி சீசனில் மட்டுமே விற்பனை அதிகமாக நடைபெறும். இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு இப்பகுதியில் தயாராகும் பட்டாசுகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. 

Tags:    

மேலும் செய்திகள்