ஆற்றின் கரையோரங்களில் கண்காணிப்பு தீவிரம்

ஆற்றின் கரையோரங்களில் கண்காணிப்பு தீவிரம்

Update: 2022-07-21 19:58 GMT

பாபநாசம்

கல்லணையிலிருந்து காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் வெளியேற்றப்படும் நிலையில் தஞ்சை மாவட்டம் காவிரி அரசலாற்றின் கரையோரம் உள்ள கிராமங்களுக்கு வருவாய், பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி துறைகள் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிப்போர் மேடான பகுதிகளுக்கு செல்லுமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. பொதுப்பணித்துறை சார்பில் நீரோட்டத்தில் வலுவிழக்கும் ஆற்றின் கரை பகுதிகளை பலப்படுத்த பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் கரையில் உடைப்பு ஏற்படும் நிலை வந்தால் உடனடியாக அடைத்து சரி செய்வதற்கு சவுக்கு கட்டைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. காவிரியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் காவிரி கரைக்கு யாரும் செல்ல வேண்டாம் என்றும் அதிகாரிகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள். மேலும் காவிரி ஆற்றில் கரை புரண்டு ஓடும் தண்ணீரையும் அந்தப் பகுதியினர் பார்த்து ரசித்து வருகின்றனர். காவிரி ஆற்றின் கரைகளை பொதுப்பணித்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்