அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த சேவை மையம்

அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த சேவை மையத்தை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.

Update: 2023-06-21 19:07 GMT

திருப்பத்தூர் தலைமை அரசு மருத்துவமனை வளாகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையம் திறப்பு விழா நடந்தது. கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமை தாங்கி ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

எம்.எல்.ஏ.க்கள் க.தேவராஜி, அ.நல்லதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைந்த சேவை மையத்தில் குடும்பத்தில், பொது இடங்களில், பணிபுரியும் இடங்களில் தனிப்பட்ட முறையிலும் மற்றும் சமுதாயத்திலும் வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஒரே கூரையின் கீழ் ஒருங்கிணைந்த ஆதரவையும், உதவிகளையும் வழங்குதல் ஆகும். மேலும் பெண்களுக்கு எதிரான எந்தவொரு வண்முறையையும் எதிர்த்து நிவாரணம் பெற ஒரே கூரையின் கீழ் மருந்துவ உதவி, காவல் உதவி, சட்ட உதவி, உளவியல் ஆலோசனை, மீட்பு மற்றும் தங்கும் வசதி உள்ளிட்ட பல சேவைகளுக்கு உடனடி அவசரகால உதவிகள் வழங்கப்படும்.

நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் சில்வியா வினோதினி, வேளாண் உற்பத்தி விற்பனையாளர் கூட்டுறவு சங்க தலைவர் ராஜேந்திரன், நகர மன்ற தலைவர் சங்கீதாவெங்கடேஷ், துணைத்தலைவர் ஷபியுல்லா, மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் சிவகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சியை கலெக்டர் தொடங்கி வைத்தார். இதில் டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்