கள்ளை பகுதியில் 5 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தம்
குற்ற சம்பவங்களை தடுக்ககள்ளை பகுதியில் 5 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
தோகைமலை அருகே கள்ளை ஊராட்சி 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் இங்கு ஊராட்சி மன்ற அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், கோவில்கள், அரசு பள்ளிகள் உள்ளன. கள்ளை பகுதியில் கிராவல் மண், கனிமவளங்கள் திருட்டு, வழிப்பறி, மின் ஒயவர்கள் திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் இரவு நேரங்களில் அதிகமாக நடந்து வருகிறது. இதனை தடுக்கும் நடவடிக்கையாக கள்ளை பஸ்நிலையம், நச்சலூர் , பேரூர், தோகைமலை, திருச்சி ஆகிய சாலை பகுதிகளில் 5 முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. குளித்தலை துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதர், தோகைமலை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் ஆய்வு செய்து திறந்து வைத்தனர்.