வளர்ச்சி பணிகளை நில நிர்வாக ஆணையர் ஆய்வு
புதுக்கோட்டை மாவட்டத்தில் வளர்ச்சி பணிகளை நில நிர்வாக ஆணையர் ஆய்வு செய்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், நில நிர்வாக ஆணையருமான நாகராஜன் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா முன்னிலை வகித்தார். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் அவர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் வாகவாசல் முதல் கேடயப்பட்டி வரை ரூ.63.79 லட்சம் மதிப்பீட்டில் 1,450 மீட்டர் நீளம் நடைபெற்று வரும் சாலை பணிகளையும், பி.எம்.சாலை முதல் கதுவாரிப்பட்டி வரை ரூ.80.3 லட்சம் மதிப்பீட்டில் 1,815 மீட்டர் நீளம் நடைபெற்று வரும் சாலை பணிகளையும், முள்ளூர் முதல் கதுவாரிப்பட்டி வரை செல்லும் சாலையில் அமைக்கப்பட்டு வரும் பாலப்பணிகளையும், கட்டுமான பணிகளை உயர்ந்த தரத்துடன் உரிய காலத்திற்குள் நிறைவேற்றி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அறிவுறுத்தினார். அதன்பின்னர் காமராஜபுரம் நகராட்சியில் உயர் நிலைப்பள்ளியிலும், அங்கன்வாடி மையத்தினையும் நாகராஜன் பார்வையிட்டார்.