பேக்கரியில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு
வந்தவாசியில் பேக்கரியில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தேரடியில் உள்ள ஒரு பேக்கரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இனிப்பு வாங்கி சாப்பிட்ட ஆட்டோ ஓட்டுநரின் குழந்தைக்கு உடல்நல கோளாறு ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்த புகாரின் பேரில் அந்த பேக்கரியில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் எ.ராமகிருஷ்ணன் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேக்கரியில் உணவு பொருள் தயாரிக்கும் கூடம், தயாரித்து வைக்கப்பட்டுள்ள இனிப்பு, ரொட்டி வகைகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சேகர், இளங்கோவன் மற்றும் பலர் உடனிருந்தனர்.