எருமப்பட்டி அருகே தரிசு நிலங்களில் அதிகாரிகள் ஆய்வு
எருமப்பட்டி அருகே தரிசு நிலங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
எருமப்பட்டி:
எருமப்பட்டி அருகே உள்ள முட்டாஞ்செட்டி ஊராட்சியில் வேளாண் உழவர் நலத்துறையின் சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் தனியாரிடம் உள்ள தரிசு நிலங்களை வாங்கி அதில் சாகுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி அந்த பகுதியில் தோட்டக்கலை உதவி இயக்குனர் வாசு, எருமப்பட்டி தோட்டக்கலை உதவி அலுவலர்கள் பிரகாஷ், ராஜவேலு, லோகேஸ்வரி ஆகியோர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது எருமப்பட்டி வருவாய் ஆய்வாளர் பாலசந்தர், முட்டாஞ்செட்டி கிராம நிர்வாக அலுவலர் சிவராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.