கியாஸ் சிலிண்டர் வெடித்து பெண் படுகாயம்
கியாஸ் சிலிண்டர் வெடித்து பெண் படுகாயம் அடைந்தார்.
இளையான்குடி,
இளையான்குடி அருகே உள்ள மரக்கான் குடியிருப்பை சேர்ந்த அந்தோணிசாமியின் மனைவி புனித மேரி (வயது45). இவர் காலை 7 மணி அளவில் தனது வீட்டில் சமையல் செய்துவிட்டு கியாஸ் சிலிண்டரை அணைக்காமல் வயலுக்கு சென்று விட்டார். பின்னர் வீடு திரும்பியவர் வீட்டில் லைட் சுவிட்சை போட்டபோது கியாஸ் சிலிண்டர் வெடித்தது. இதில் படுகாயம் அடைந்த அவர் இளையான்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து சாலை கிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.